முன்னாள் மத்திய மந்திரியும், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன், தனது தந்தை மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக அர்ஜூனமூர்த்தி இருந்தார் என வெளியான செய்தி முற்றிலும் பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் தொடங்க இருக்கிற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜூனமூர்த்தி, எனது தந்தை மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.