Skip to main content

'இது பாராட்டத்தக்கச் செயலா;தமிழ்நாடு எங்கே போகிறது?' -அன்புமணி ராமதாஸ் 

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

 Is this a commendable act; Where is Tamil Nadu going? -Anbumani Ramadoss

 

'அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்கச் செயலா? தமிழ்நாடு எங்கே போகிறது? மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்' என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் தேடித் தந்ததற்காக அதன் பணியாளர்கள் 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து திரும்பப் பெற்றுள்ளது. இந்திய குடியரசு நாள் என்ற புனித நாளில், பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் கடைபிடித்துள்ள அளவீடு அதிர்ச்சியளிக்கிறது. எதிர்ப்பு எழாமல் இருந்திருந்தால் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் கலாச்சாரம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கக்கூடும்.

 

குடியரசு நாளில் ஒருபுறம் சென்னையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருதை முதலமைச்சர் வழங்குகிறார்; மறுபுறம் மது விற்றவர்களுக்கு கரூர் ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். இது என்ன முரண்பாடு? தமிழ்நாடு எங்கே போகிறது? டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இத்தகைய பாவங்களுக்கு பரிகாரம் தேடவும், மக்களைக் காக்கவும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக  அரசு அறிவிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கோவிலில் யாகம் வளர்த்த பக்தர்கள்; விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Devotees who raised sacrifices in the temple; Banished bees

கரூர் மாவட்டம் அருகே உள்ளது நெரூர் பகுதி இந்தப் பகுதியில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்தக் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக கும்பகோணத்தில் இருந்து ஆறு பக்தர்கள் அந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். இதனால் கோவிலில் யாகம் செய்து பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தீயில் உருவான புகை கோயில் முழுக்க பரவியது. அப்பொழுது கோவில் வளாகத்திலேயே இருந்த மரத்தில் தேன்கூடு ஒன்று இருந்தது. அதிகப்படியான புகையால் தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் கிளம்பின.

கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரையும் தேனீக்கள் கொட்ட தொடங்கியது. உடனடியாக அனைவரும் கோவிலுக்கு உள்ளேயே ஒளிந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் தீயணைப்பு துறை எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உடை, முக கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு உள்ளே சென்று பக்தர்களை சலனமில்லாமல் ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாகம் வளர்த்த புகையால் தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் கிளம்பி, கொட்டிய சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Caste wise census CM MK Stalin explanation

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024)  இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும். 

Caste wise census CM MK Stalin explanation

எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவரவுள்ள இந்தத் தீர்மானத்தை ஜி.கே.மணி ஆதரிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி நீங்கள் எந்தக் கூட்டணியில் உள்ளீர்கள் என்று தெரியும். எனவே இது குறித்து நீங்கள் மத்திய அரசிடம் சொல்லுங்கள்” எனப் பதிலளித்தார். இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள்ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள்ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதி வாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.