Skip to main content

அரசு அறிவித்த எந்த சலுகையும் இதுவரை கிடைக்கவில்லை... தூய்மைப் பணியாளர்கள் வேதனை (படங்கள்)

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

சென்னை மதுரவாயல் - பூந்தமல்லி சாலையில் தூய்மைப் பணியாளர்கள் சனிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள், வெயில், மழை என பார்க்காமல் கரோனா தொற்று காலத்திலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு விடுமுறை கிடையாது. முதல்வர் இரண்டு மாத சம்பளம் தருவதாக கூறினார். 2500 ரூபாய் சன்மானம் தருவதாக கூறினார்.

அரசு அறிவித்த எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. 144வது வார்டில் இருந்து மதுரவாயலில் இன்று வந்து வேலை பார்க்கிறோம். அரசு அறிவித்த எந்த சலுகையும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் இதுவரை அரசு சொன்னப்படி விடுமுறை எடுக்காமல் வேலை செய்து வருகிறோம். எங்களோட கார்ப்பரேஷன் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் சில உதவிகளை செய்து வருகின்றனர். எங்களின் குடும்பம் கஷ்டத்தில்தான் இருக்கிறது. கரோனா காலத்திலும் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறோம். ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த சலுகைகள், அறிவிப்புகள் எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

 

சார்ந்த செய்திகள்