Skip to main content

சென்னை மேயர் பதவி... குறி வைக்கும் அதிமுக முக்கிய விஜபிக்கள் யார்? யார்?

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

 

அதிமுகவின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் நவ.6ஆம் தேதி புதன்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 8.15 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

 

admk


 

உள்ளாட்சித் தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டபோது, சென்னை மாநகராட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள தேர்தல் பணியினை மும்முரமாக செய்ய வேண்டும் என்றும், திமுகவுக்கு நிகராக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் தலைமை விரும்புகிறது. ஆகையால் இதில் கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று முக்கிய நிர்வாகிகள் பேசினார்கள். 
 

அப்போது, மேயர் பதவி கேட்டு பலர் வலியுறுத்தினர். ஜே.சி.பி. பிரபாகர், நா.பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்பியும் அமைச்சர் ஜெயக்குமார் மகனுமான ஜெயவர்தன், ஆதிராஜாராம் உள்ளிட்ட பலர் மேயர் பதவி கேட்டு வலியுறுத்தியுறுத்தியதாக கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.


 

சென்னையைச் சேர்ந்த அதிமுக விஜபிக்கள் சிலர், வெளியூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு வாய்ப்பு வழங்கக்கூடாது. அது தோல்விக்கு வழிவகுக்கும். ஆகையால் சென்னையைச் சேர்ந்தவர்களுக்கே வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 

மாறி மாறி மேயர் சீட்டு கேட்டு நிர்வாகிகள் மல்லுக்கட்டியதால், கூட்டணி கட்சிகளை முதலில் சமாதானப்படுத்துவோம். கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் சென்னை மேயர் பதவியை குறி வைக்கின்றன. ஆகையால் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு வரட்டும். இதுபற்றி பேசுவோம். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருங்கள் என்று தலைமை நிர்வாகிகள் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்களாம். 


 

சார்ந்த செய்திகள்