ஆன்மிகத்தின் பெயரால் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தவருக்கு இப்போது அடுக்கடுக்காக அதிர்ச்சிகள் வருவதாக கூறுகின்றனர். இது பற்றி விசாரித்த போது, பிடதி ஆசிரமத்தில் இருந்த ஒரு மண்டபத்தைக் கோயில் மாதிரி செட் போட்டு எடுத்து, அதற்கு ஜனவரி 30-ந் தேதி கும்பாபிசேகம் நடக்கப் போகுது என்று 16 கோடி ரூபாய்க்கு மேல் தன் ஆட்கள் மூலம் வசூல் செய்து, போலீஸ் டீமுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார் நித்தியானந்தா.
இதற்கிடையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் நித்தியின் குஜராத் ஆசிரம பெண் நிர்வாகிகளான பிரன்பிரியா, பிரியா தத்வா ஆகிய இருவரும் ஜாமீனில் விடப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நேபாளத்தில் கொல்லப்பட்ட நித்தியின் சீடரான சதீஷ் செல்வகுமாருடன் சென்றிருந்த நித்தியின் இரண்டு பெண் சீடர்கள், தற்போது பலத்த காயங்களோடு நேபாளத்தில் உயிருக்குப் போராடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற தகவல்கள் தொடர்ந்து வருவதாலும், நீதிபதி குன்ஹா, நித்தி வழக்கில் தீவிரமாக இருப்பதாலும், நித்தியை எப்படியாவது மடக்குங்கள் என்று மத்திய உள்துறை உத்தரவைப் பிறப்பித்து, இப்போது நித்தியானந்தா தரப்புக்கு ஹைவோல்ட் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு என்கின்றனர்.