![Central Chennai sdpi Candidate Campaign](http://image.nakkheeran.in/cdn/farfuture/wliNFleuOmKvO8K61eHkIPx3IDIZHqQD5jIGBmgPKao/1554708260/sites/default/files/2019-04/sdpi-ammk-01.jpg)
![Central Chennai sdpi Candidate Campaign](http://image.nakkheeran.in/cdn/farfuture/PBfGcEqeR0E8u4-cdXiyooI5jevb9sL-NHAJD3GYBVA/1554708260/sites/default/files/2019-04/sdpi-ammk-02.jpg)
Published on 08/04/2019 | Edited on 08/04/2019
2019 மக்களவைத் தேர்தலில் அமமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு மத்திய சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தெஹ்லான் பாகவி மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் எல். ராஜேந்திரன் மற்றும் இளைஞர் அணி பகுதி செயலாளர் சாய் கணேஷ், 114வது கிழக்கு வட்டக் கழக செயலாளர் ஏ.எஸ்.அற்புதராஜ் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.