Skip to main content

ஒடிசா விபத்துக்கு காரணம்? புள்ளி விவரங்களை அடுக்கும் சு.வெங்கடேசன் எம்.பி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Cause of Odisha accident? M. P.  Su. Venkatesan also laid out the statistics

 

மதுரை நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு மற்றும் திட்டப்பணிகள் ஆய்வு முகாம் எம்.பி. சு.வெங்கடேசன் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல எண் 4 இல் குறைதீர்ப்பு முகாம் மற்றும் திட்டப்பணிகள் ஆய்வு நடந்தது. இந்நிகழ்வில் மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம் என நிர்வாக ரீதியிலான அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. சு.வெங்கடேசன், “ஒடிசா ரயில் விபத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. ஒடிசா விபத்துக்கு பிறகு நடக்கும் விபத்துகள் மட்டுமல்ல, இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்கும் சூழலை மத்திய அரசின் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவை நாம் பார்க்கிறோம். மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை ரயில்வே துறைக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் ரயில்வேயின் அனைத்து பிரச்சனைகளையும் நாம் அலசி ஆராய்ந்துள்ளோம். ஆனால் இப்போது ரயில்வேக்கென்று தனி பட்ஜெட் கிடையாது. பொது பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியின் குறியீடு மட்டும் தான் இருக்கும். அதன் பின் 10 நாட்களுக்கு பின் பிங்க் புத்தகம் வெளியிடப்படும். அந்த புத்தகத்தில் எந்த திட்டம், எவ்வளவு நிதி என அலசி ஆராய்வதற்குள் அந்த கூட்டத்தொடரே முடிந்திருக்கும். எனவே ரயில்வே துறையின் பல திட்டங்கள் பொதுப்பார்வைக்கு வராமலேயே இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

 

விமானத்துறையாக இருந்தாலும் சரி, ரயில்வே துறையாக இருந்தாலும் சரி, அவற்றின் மீது நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டிய விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. அவை அனைத்தும் திரை மறைவுக்கு பின்னால் கொண்டு செல்லப்பட்டது. அதனுடைய விளைவுகள் தான் இது. இன்று எழுப்பப்படும் பல கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே துறையின் ஆலோசனை குழு கூட்டம் ரயில்வே அமைச்சரின் தலைமையில் நடந்தது. ஆலோசனை குழுவின் உறுப்பினர் நான். 13 ஆயிரம் இன்ஜின்கள் ரயில்வே துறையில் இயங்குகிறது. அதில் 65 இன்ஜின்களில் மட்டுமே கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டது என்பது அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம். இந்த ஒரு வருடத்தில் எத்தனை இன்ஜின்களில் பொருத்தியுள்ளீர்கள் என நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம். கேட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. இன்று வரை மத்திய அரசு எந்த பதிலும் வழங்கவில்லை” என்றார்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநரின் விழாவை புறக்கணித்த பேராசிரியர்கள்! சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்ளாத நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. இதனையேற்று பல்கலை. செனட் மற்றும் சிண்டிகேட் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார்.

 

இதனிடையே, ஆளுநரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். இந்த நிலையில், மதுரை வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் செய்த 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

 

இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று காமராஜ் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பட்டங்களைப் பெற்றனர். அதே நேரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுரேஷ் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர்  ஆளுநர் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர். 

 

Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP

 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“ஊளையிடும் நரிக்கூட்டம் சங்கநாதத்திற்கு சான்றளிக்க முடியுமா?” - சு.வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Can a howling fox bear witness to Sanganatha Su Venkatesan MP

 

தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனையடுத்து சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்த சூழலில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்பில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுத்ததாக சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டி இருந்தார். அதே சமயம் ஆளுநருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் (ட்விட்டர்) சமுக வலைத்தளத்தில், “சாவர்க்கரை கெளரவிப்பவர்களால் சங்கரய்யாவை எப்படி கொண்டாட முடியும்?. ஊளையிடும் நரிக்கூட்டம் சங்கநாதத்திற்கு சான்றளிக்க முடியுமா?. நாங்கள் யாரென பிரிட்டீஷாரின் சிறைச்சாலைகள் சொல்லும். நீங்கள் யாரென பிரிட்டீஷார் அணிந்த ஷுக்கள் சொல்லும். வீரமும் துரோகமும். எப்பொழுதும் எதிரெதிரானதே!” என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்