அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்த நிலையில் காலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டினை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மாநாட்டை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பினை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை 10 மணியளவில் விமானம் மூலம் டெல்லி சென்று ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் முதல்வர் இரவே சென்னை திரும்புகிறார்.
அதேபோல் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதமானது எடப்பாடி பழனிசாமிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹத் ஜோஷி அனுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் காலை 10 மணியளவில் அவருக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார். இதன் பின் காலை 11.30 மணியளவில் சென்னையிலிருந்து ஈபிஎஸ் டெல்லி பயணம் செய்ய உள்ளார்.