/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-std site.jpg)
2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கை காட்டும் கட்சிதான் ஆட்சி அமையும் என்றும்,இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழும் என்றும் பா.ஜ.க. தமிழக மாநில தலைவர் எல்.முருகன் அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.
அதேபோல், வரும் சட்டப்பேரவை தேர்தலில்பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெற்று பா.ஜ.க. அங்கம் வகிக்கக்கூடிய அரசுதான் அமையும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனும் கூறியிருந்தார். இது அரசியல்ஆர்வலர்களிடத்திலும், அரசியல் விமர்சகர்களிடத்திலும் பெரும் பேசுபொருளாகியிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp-in-site.jpg)
இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றுள்ளது. இதில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார்.இது ஒருவேளை அடுத்து தமிழகத்தில் வரவிருக்கும் 2021 தேர்தல் குறித்தான விஷயங்களையும் வேட்பாளர்கள் குறித்தான பேச்சாகவும் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்தான ஆலோசனைகளும் நடந்திருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் கே.டி. ராகவன், மதுவந்தி, நடிகை நமிதா மற்றும் நாராயணன் திருப்பதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/02_24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/01_24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/03_24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/04_23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/05_17.jpg)