Skip to main content

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை முட்டாள் என்று கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்!

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துவருகிறது.2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு  முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. 
 

bjp

 


இதனையடுத்து தமிழ் சினிமா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது, இங்கு யார் வேண்டுமானாலும் வசிக்கலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் இந்த கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், படித்த முட்டாளின் பார்வை தவறானால் நம் தாய் நாடு இவர்களை போன்றவர்களால்  அழிவை நோக்கி செல்லும். அதை  அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த கருத்தை பலரும் விமரிசித்து வருகிறார்கள்.  

 

இதை படிக்காம போயிடாதீங்க !