தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளை குறிவைத்து பாஜக ரெய்டு நடத்தி வருகிறது. அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகம் புகழும் பெயர் கொண்டவரின் கல்வி நிறுவனங்களில் ரெய்டு நடத்தி, 200 கோடி ரூபாய்க்கான முறைகேடுகளைக் கண்டுபிடித்ததோடு, கணக்கில் வராத 20 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர். அந்த மாஜி மந்திரியோ, தனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் மூலம், வருமான வரித்துறையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அதிகாரிக்கு 20 ’சி’ வரை கொடுத்து, சிக்கலில் இருந்து தப்பிக்கும் போராட்டத்தில் இருக்கிறார் என்கின்றனர்.
ஆனால் டெல்லி பா.ஜ.க. தரப்பின் கவனத்துக்கு இந்த செய்தி போக, மாஜியை விட்றாதீங்க என கறார்க குரலில் உத்தரவு போட்டதாக சொல்லியிருப்பதாக கூறுகின்றனர். அதே போல் திமுக கட்சித் தலைமைக்கும் செக் வைக்க ப்ளான் போட்டு இருப்பதாக கூறுகின்றனர். இதனால் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனைத்தான் முதலில் கண்காணித்தார்கள். தற்போது சபரீசனோடு படித்து இப்போது நட்பில் இருப்பதாக சொல்லப்படும் சர்வேஸ் என்ற காவல்துறை அதிகாரியை மத்திய புலனாய்வு அமைப்புக்கு அழைத்துக் கொண்டது டெல்லி என்கின்றனர். இப்படி எல்லோரையும் தன் அதிகாரத்தை காட்டிக் காட்டியே அடக்கி வைப்பதுதான் பா.ஜ.க.வின் மாஸ்டர் வியூகமாக இருப்பதாக கூறுகின்றனர்.