Published on 12/08/2020 | Edited on 12/08/2020

இன்று காலையில் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் தலைமையில்தான் கூட்டணி அமையும். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும். அதேபோல் தமிழகத்தில் அதிமுக-திமுக இடையே போட்டிதான் இதுவரை நிலவி வந்தது, இனிமேல் பாஜக-திமுக போட்டியாக இருக்கும் எனவும் கூறினார்.
ஒருபுறம் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கருத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது வி.பி துரைசாமி இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.