Skip to main content

'திரௌபதி' என்ற பேரைக் கேட்டாலே பயம் கவ்விக் கொள்ளும்... 'திரௌபதி' குறித்து எச்.ராஜா கருத்து!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

bjp

 


சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்திற்குப் பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இப்படம் வட மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் படமாகவும், அப்பா - மகள் பற்றி பேசும் படமாகவும் உருவாகியிருந்தது. நடிகர் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரெளபதி படத்தை வெளியிட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்படத்தக்கது.
 


இந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் திரௌபதி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இன்று தொலைக்காட்சியில் திரௌபதி சபதம். கௌரவர்களின் முடிவின் ஆரம்பம். அதேபோல் இந்து விரோத தி.க., தி.மு.க. (துரியோதனன், துச்சாதனன் கும்பல்) வை வருகின்ற தேர்தலில் தோற்கடிக்க ஒவ்வொரு இந்துவும் சபதமேற்கும் தருணமிது. சிலருக்கு திரௌபதி என்ற பேரைக் கேட்டாலே பயம் கவ்விக் கொள்ளும் என்றும், திருமலா திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி கோவில் சொத்துகளை விற்க நினைப்பது சட்ட விரோதமானது. கண்டிக்கத்தக்கது. ஒரு சர்ச் அல்லது மசூதி சொத்துகளை விற்க ஜெகன் மோகன் முயற்சிப்பாரா? ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே இது என்றும், கோவில்கள் அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'விரைவில் இந்தியா கூட்டணி பட்ஜெட் '-கமல்ஹாசன் கருத்து

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
'India alliance budget soon' - Kamal Haasan comments

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக கூட்டணிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 'விரைவில் இந்தியா கூட்டணி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்' எனவும் பதிவிட்டுள்ளார். அதேபோல் 2024 மத்திய பட்ஜெட் குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் 'ஆந்திரா பீகாருக்கு பட்ஜெட்; மற்ற மாநிலங்களுக்கு அல்வா' என விமர்சித்துள்ளார்.

 

Next Story

'தமாகா நிர்வாகிகள் ராஜினாமா செய்வதன் காரணம் இதுதான்'-விளக்கம் கொடுத்த விடியல் சேகர்  

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Vidyal Shekhar explains 'resignation is for party reform

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப வேண்டும். மாதாந்திர கட்டணத்தை மாற்றி மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் மின்சார துறையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர், 'தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருவது குறித்த சர்ச்சைக்கு, கட்சியின் நிர்வாக சீரமைப்பிற்காக அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை என்பது கட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறையில் உள்ள இயல்பான ஒன்று என்பதால் இதில் அரசியல் எதுவும் இல்லை என கூறிய அவர், புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜி.கே.வாசன் விரைவில் வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.