உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,341 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 800 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதோடு முடிந்தளவு வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கூறிவருகின்றனர்.

Advertisment
Advertisment

bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், " பெயர் சொல்ல விரும்பவில்லை. நான் இன்று வரை விமானத்தில் J கிளாசில் போனதில்லை.ஆனால் தங்களை காம்ரேட் என்றும் தொழிலாளிகள் துணைவன் என்றும் கூறிக்கொண்டு J கிளாசில் நான் சென்ற அதே விமானத்தில் பயணித்த நபர்கள் இன்று தொலைக்காட்சியில் பாடம் எடுக்கின்றனர். விஜய் மல்லையா,நிரவ் மோடி, சோக்சி,இவர்கள் கடன் பெற்றது காங்கிரஸ் ஆட்சியில்.மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகளால் இந்தியா திரும்ப முடியவில்லை.மேலும் அனில் அம்பானி படும் பாடு உலகறியும்.மேலும் கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு 3 லட்சம் கோடிக்கு மேல் வாராக் கடனை வசூலித்துள்ளது என்றும், அவங்க குடும்பத்தோடு திகார் சிறைக்குப் போவார்கள். கொரோனா அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் அவ்வளவே என்றும், கொஞ்சம் இப்ப பாருங்க சாத்தான் வேதம் ஓதுது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment