Skip to main content

'தமிழகத்திற்கும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்'-பாஜக அண்ணாமலை பேச்சு!

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

bjp annamalai speech

 

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக தமிழகம் முழுவதும் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, ''150 சதவிகிதத்திற்கு மேலே சொத்து வரியை உயர்த்தி உள்ளார்கள். சொத்து வரியை உயர்த்துவது மூலமாக சாதாரண மக்கள், வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு என்னென்னெ பிரச்சனைகள் வருகிறது, பொருளாதார மந்தம் எப்படி ஏற்படுகிறது என எல்லோரும் சொன்னார்கள். குறிப்பாக திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகச் சொல்லியிருந்தது. ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் குறைத்துள்ளார்கள். பிரதமர் மோடி நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை பெட்ரோல், டீசல் விலையை  இரண்டு முறை குறைத்துள்ளார்கள்.

 

புதுச்சேரிக்கு அருகாமையிலே என் வீடு இருக்கிறது. பார்டரை தாண்டி விட்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய் பார்டருக்கு இந்த பக்கம் தமிழகத்தில் 102 ரூபாய் 72 காசு. 6 ரூபாய் வேறுபாடு இருக்கிறது. தமிழகத்தில் டீசல் 94 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஜஸ்ட் பார்டரை தாண்டி புதுச்சேரி சென்றால் 86 ரூபாய் ஒரு லிட்டர் டீசல். 8 ரூபாய் வேறுபாடு இருக்கிறது. இந்தியாவிலேயே 1967-க்கு பிறகு வந்த ஆட்சி, திராவிட மாடல் என்று சொல்லும் நீங்கள்... பிஹார், உத்தரப் பிரதேசம் பின்தங்கியுள்ளது எனச் சொல்லும் நீங்கள்... அங்கெல்லாம் 12 ரூபாய் பெட்ரோலுக்கு விலை குறைந்திருக்கும் பொழுது மார் தட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசு ஏன் விலையை குறைக்க முடியவில்லை.

 

1967-ல் இருந்து நாம்தான் (தமிழ்நாடு) முன்னே இருக்கோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் நமக்கு பாடமெடுத்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் பெட்ரோல் விலையைக் குறைத்த பிறகு  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் கூட பெட்ரோல் விலை குறைந்துள்ளது என்றால், இந்த திமுக அரசுக்கு மனசாட்சி இல்லை என்றுதானே அர்த்தம். நாம் சாதாரண எதிரிகளை எதிர்க்கவில்லை பெரும் எதிரிகளை எதிர்க்கிறோம். பணத்தைக் கையிலே வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை விலைபேச முடியும் என்று நினைப்பவர்களை எதிர்க்கிறோம். மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்த உத்தவ் தாக்ரேவின் மகன் அமைச்சராக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டார். இங்கும் முதலமைச்சரின் மகன் அரசியல் ஆசையில் இருக்கிறார். அமைச்சரவை மாற்றும் தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'விரைவில் இந்தியா கூட்டணி பட்ஜெட் '-கமல்ஹாசன் கருத்து

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
'India alliance budget soon' - Kamal Haasan comments

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக கூட்டணிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 'விரைவில் இந்தியா கூட்டணி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்' எனவும் பதிவிட்டுள்ளார். அதேபோல் 2024 மத்திய பட்ஜெட் குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் 'ஆந்திரா பீகாருக்கு பட்ஜெட்; மற்ற மாநிலங்களுக்கு அல்வா' என விமர்சித்துள்ளார்.

 

Next Story

'அவர் தமிழக நலனையே புறக்கணிக்கிறார்'- தமிழிசை கருத்து

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
'He is neglecting the welfare of Tamil Nadu' - Tamilisai opinion

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் பல கோரிக்கைகளை எடுத்து வைத்திருந்தேன். நிதிநிலை அறிக்கையில் இதுவெல்லாம் இடம்பெற வேண்டும்; இதையெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்று கோரிக்கைகளை வைத்திருந்தேன். மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்க கூடிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்; கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; தாம்பரம் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் இப்படி சில கோரிக்கைகளை நான் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் எதையுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

'He is neglecting the welfare of Tamil Nadu' - Tamilisai opinion

மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக்கிய ஒரு சில மாநில கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். அறிவித்திருக்கிறார்களே தவிர அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம்தான் என்னைப்  பொறுத்தவரை. எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்று அறிவித்துவிட்டு நிதி ஒதுக்காமல் இன்றுவரை ஏமாற்றி வருகிறார்களோ அதேபோல அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தமிழகத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறேன். அதை நான் புறக்கணிக்க போகிறேன். நாளை திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவார்கள்'' என்றார்.

nn

இந்நிலையில் தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதை தமிழிசை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் முதல்வர் தமிழக மக்களின் நலனை புறக்கணிக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் புறக்கணிப்பது என்பது மக்கள் நலனையே ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் செயலாகும்.நேரில் சந்தித்து விவாதித்து தேவையானதை தமிழக முதல்வர் பெற வேண்டும்' என தெரிவித்துள்ளார். அதேபோல் 2024 மத்திய பட்ஜெட் குறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் 'ஆந்திரா பீகாருக்கு பட்ஜெட்; மற்ற மாநிலங்களுக்கு அல்வா' என விமர்சித்துள்ளார்.