Skip to main content

''அமைச்சர் பொய் சொல்வதையே பிழைப்பாக வைத்திருக்கிறார்''- பாஜக அண்ணாமலை சாடல் 

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

bjp

 

அனைத்து நாட்களிலும் கோவில்களைத் திறக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கடந்த 7 ஆம் தேதி தமிழகத்தின் முக்கிய கோவில்களின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், பள்ளிகள், திரையரங்குகளை திறக்கும் அரசு, கோவில்களையும் கட்டுப்பாடுகளுடன் அனைத்து நாட்களும் திறக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர்.

 

பாஜகவின் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  ''போராடுவதற்கான வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தி அவர்களாகவே அவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தான் நோய்த்தொற்று தளர்வுகளை நாம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்தாலும் அனைத்து வகையான பூஜைகளும் எப்போதும் போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நோய்த் தொற்று அபாயம் நம்மைவிட்டு நீங்கியவுடன் நிச்சயமாக முதலமைச்சர் கோவில்களை திறப்பதை தான் முதல் பணியாக மேற்கொள்வார் என்ற உறுதியை அளிக்கின்றோம்'' எனக்கூறியிருந்தார்.

 

BJP Annamalai press meet

 

இந்நிலையில் சென்னை துரைப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''5 சதவிகிதத்திற்கும் கீழ் எங்கு டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் குறைவாக இருக்கிறதோ அங்கு தளர்வுகளை கொண்டுவரலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தர்மபுரியில்தான் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் அதிகமாக இருக்கிறது. 2.48 சதவிகிதம். அதேபோல் சேலத்தில் தான் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 0.2 சதவிகிதம் எனக் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிகமாக டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டே தருமபுரியில் உள்ள 2.48 சதவிகிதம் தான். இது மத்திய அரசு சொல்லியிருக்கிற 5 சதவிகிதத்திற்கு கீழ் உள்ளது. எந்த தேங்காயை உருட்டி எந்த தேங்காயை உடைப்பதற்கு அமைச்சர் ஐடியா செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. மக்களிடம் பொய் பேசுவதை மட்டும் பிழைப்பாக அமைச்சர் வைத்திருக்கிறார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.