Skip to main content

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில் போலீசார் திடீர் சோதனை!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

fff

 

சொத்துக் குவிப்பு வழக்கில்,  கர்நாடக மாநிலம் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா.

 

இந்தச் சிறையில், சிலர் சமீப காலமாகக் கைதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்வதாகவும், செல்ஃபோன் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சிலர் புகார் அளித்துள்ளனர்.

 

இந்தப் புகாரையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், மத்திய மந்திரி. இந்த உத்தரவின் பேரில் போலீஸ் உயரதிகாரிகள் பரப்பன அக்ரஹார சிறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். திடீரென நடந்த இந்தச் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேட்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு; போராட்டத்தில் குதித்த விவசாய சங்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Denial of entry for wearing a vest in bangalore

கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாகடி சாலையில் ஜி.டி. வேர்ல்ட் என்ற தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், நேற்று முன்தினம் (16-07-24) பகீரப்பா என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன், அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார். 

ஆனால், பகீரப்பா வேட்டி அணிந்து வந்திருந்ததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பகீரப்பாவும், அவரது மகனும் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனாலும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், வேட்டி அணிந்து வந்தததால் விவசாயிக்கு அனுமதி அளிக்காத வணிக வளாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், நேற்று அந்த தனியார் வணிக வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக வணிக நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது, ‘வேட்டி அணிந்து வந்த விவசாயி வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். 

Next Story

பள்ளி புத்தகத்தில் தமன்னா குறித்து பாடம்; கொந்தளித்த பெற்றோர்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
A lesson on Tamannaah in the school curriculum in bangalore

தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, 15 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தமன்னாவைப் பற்றி பள்ளி பாடப்புத்தக்கத்தில் சேர்க்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் ஹெப்பால் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சிந்தி மக்களின் வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் தமன்னாவைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. 

இந்த விவகாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியவர, இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள ஆங்கில வழி பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.