2011 - 2016 அதிமுக ஆட்சிக்காலத்தின்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் ஒரத்தநாடு வைத்திலிங்கம். இவர் கட்டட அனுமதி வழங்குவதற்காக 2015 - 2016 காலகட்டத்தில் ஸ்ரீராம் குழும நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய்வரை லஞ்சமாகப் பெற்றதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது.
ஸ்ரீராம் குழுமத்தின் ஸ்ரீராம் பிராபர்ட்டிஸ் அண்ட் இன்பிராஸ்ட்ரக்க்ஷர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக் 1453 வீடுகள் கொண்ட உயர்மட்ட கட்டுமானங்கள் திட்ட அனுமதிக்கு 2/12/2013 அன்று சிஎம்டிஏவில் விண்ணப்பம் செய்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு மேல் காலம் தாழ்த்தி 24/2/2016 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்ட அனுமதிக்காக ரூ 27.9 கோடி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
'இந்த லஞ்சம், திட்ட அனுமதிக்காக மட்டும் கொடுக்கப்பட்ட லஞ்சமா அல்லது கட்டுமானத்தில் சட்டத்திற்கு புறம்பாக விதிமீறல் செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ள அறப்போர் இயக்கம், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்த @Vaithilingamofl CMDAவில் @shriramprops நிறுவனத்திற்கு கட்டிட அனுமதி கொடுக்க 29 கோடி லஞ்சம் வாங்கிய ஆதாரங்களும் DVACல் அறப்போர் கொடுத்த புகாரும்: https://t.co/jAisJ3VP2K#Vaithilingam #Shriram Bribe Video: https://t.co/FclYmZbm29 pic.twitter.com/445hupArsd
— Arappor Iyakkam (@Arappor) May 21, 2022