தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாபநாசம், மணப்பாறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொ.ம.தே.கவிற்கு திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி.