Skip to main content

“எ.வ.வேலு சொல்வதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்” - அண்ணாமலை

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Annamalai regarding DMK ministers pressmeet

 

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அண்மையில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அதில் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடிக்க நேர்ந்ததையும், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட அந்தக் கோயில்களுக்குப் பதிலாக இடிக்கப்பட்டதைவிடப் பெரிய அளவில் மூன்று கோயில்களை மீண்டும் கட்டிக்கொடுத்ததையும் சுட்டிக்காட்டிப் பேசினார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு பேசியதை காணொலியாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் டி.ஆர்.பாலு பேசியதில் சிலவற்றை வெட்டிவிட்டதாக திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “நேற்று டி.ஆர்.பாலு பேசிய காணொலியை பாஜக வெளியிட்டது. அதற்கு திமுகவின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சில கருத்துகளைத் தெரிவித்ததாக ஊடக நண்பர்கள் சொன்னார்கள். டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அந்த வீடியோவில் எங்கும் கட் செய்யவில்லை; எடிட் செய்யவில்லை. அந்த வீடியோ அப்படியே இருந்தது. அதில் நான் சொல்லியது, கோவிலை இடித்ததை பெருமையாக டி.ஆர்.பாலு பேசினார் என்று. அந்த வீடியோவின் இறுதியில் கோவிலைக் கட்டிக்கொடுத்ததாகவும் சொல்லியுள்ளார். கோவிலைக் கட்டிக்கொடுத்தது முக்கியம் கிடையாது. ஒரு எம்.பி கோவிலை இடிப்பதை பெருமையாக பேசுவதை தமிழக மக்கள் பார்த்தார்கள்.

 

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக வேலை செய்யச் சென்ற அமைச்சர்கள் பேசியதையும் பார்த்தோம். அமைச்சர் எ.வ.வேலு நாங்கள் ஏதோ மார்பிங் செய்து போட்டுள்ளதாகச் சொல்லியுள்ளார். நான் அவருக்கு சவால் விடுகிறேன். ஒரிஜினல் காணொலியை எ.வ.வேலு எங்கு சொல்கிறாரோ அங்கு கொடுக்கிறோம். தமிழக காவல்துறைக்கே அதைக் கொடுக்கிறோம். முதல்வர் அந்த வீடியோவினை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பாஜக தயாராக இருக்கிறது. அதில், ஒரு அமைச்சர் 31 ஆம் தேதிக்குள் பணம் கொடுக்க வேண்டும் என்றும், யாரால் பணம் கொடுக்க முடியும்; யாரால் கொடுக்க முடியாது எனவும் பேசுகிறார். நாளை காலை பாஜக தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவினை கொடுக்க இருக்கிறார்கள். அதை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கலாம். எ.வ.வேலு சொல்வது போல் அதை நான் எடிட் செய்துள்ளேன் என்பதை நிரூபித்தார் என்றால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.