Skip to main content

“மற்றவர் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள்” - அண்ணாமலை

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

annamalai covai airport press meet talks about rasa speech 

 

மற்றவர் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

கலைஞரின் பேனா மையால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  ஐபிஎஸ் ஆனார் என திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசி இருந்தார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார்.

 

அப்போது அவர், "நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு என்ஜினீயரிங், மருத்துவம் படித்தவர்களின் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி சொந்தம் கொண்டாடுகின்றனர். இன்னொருவரின் குழந்தைக்கு ஏன் பெயர் வைக்கிறீர்கள். கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர்களில் எத்தனை பேர் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆனார்கள். ராசா குடும்பத்தில் ஏன் யாரும் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆகவில்லை" எனக் கேள்வி எழுப்பி உள்ளார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி! - அண்ணாமலை சொல்வது என்ன? 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவரிடத்தில் இருந்து லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். 

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

இதில் பேரம் நடந்து பிறகு 51 லட்சம் ரூபாய் லஞ்சமாக தருவதில் வந்து முடிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாய் முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையைக் கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

 

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவிய 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார். இதன் பிறகு அவரிடத்தில் 15 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல், அவர் பணியாற்றி வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 13 மணி நேரமாக சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அவர் தெரிவித்ததாவது, “இதை அரசியலாக பார்ப்பதைவிட, ஒரு நபர் லஞ்சம் வாங்க முற்பட்டு, லஞ்சம் வாங்கியுள்ளார். அவரை கைது செய்திருக்கிறார்கள் என்றுதான் நான் பார்க்கிறேன். இது மிகவும் புரஃபஷ்னலா அணுகவேண்டிய விஷயம். இதற்காக மொத்த அமலாக்கத்துறை மீதும் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. அமலாக்கத்துறை மீது தவறு இல்லை. மனிதர்கள் செய்யும் தவறுக்கு அமலாக்கத்துறை மீது தவறு சொல்ல முடியாது. தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்குபவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

 

இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. அவர்களுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி குறைவு. அதுவும் தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். சம்மந்தமே இல்லாமல் ஒரு கட்சியையும், கட்சியின் தலைவரையும் தொடர்புபடுத்தி பேசும் அளவிற்கு மெச்சூரிட்டி குறைவான தமிழ்நாடு அரசியல்வாதிகளை வைத்தே தமிழ்நாடு வாழ்ந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'இதுவா சமூக நீதி?' - ராமதாஸ் கேள்வி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அண்மையில் அரசு மாநகர பேருந்துகளில் இலவசப்பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளிடம் பேருந்து நடத்துநர்கள் பெயர், வயது, செல்போன் எண், சாதி ஆகியவற்றை கேப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்ட திட்டம்.

 

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களின்  பெயர், வயது, சாதி, கல்வித்தகுதி உள்ளிட்ட 15 வகையான வினாக்கள் கேட்கப்பட்டு, அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இது தேவையானதும் கூட. இந்தத் தகவல் சேகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் இத்தகைய கணக்கெடுப்பு மிகவும் அவசியம், இது சமூகநீதி நடவடிக்கை என்று கூறியிருந்தார்.

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நான், ’’நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில், திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவே தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்?  அதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று வினா எழுப்பியிருந்தேன்.

 

இது நடந்தது நவம்பர் 27-ஆம் நாள். அதன்பின் 4 நாட்கள் கழித்து இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

 

அது என்ன நடவடிக்கையாக இருக்கும்? தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு ஆணையிட்டு விட்டதோ என்று தானே நினைக்கிறீர்கள். வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.... அது தான் இல்லை. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்துவதை நிறுத்தி விட்டார்கள் என்பது தான் அந்த நடவடிக்கை. சமூகநீதியை எப்படி பாதுகாக்கிறார்கள்' பாருங்கள்' என பதிவிட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்