/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1714.jpg)
திருச்சியில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இன்று திருச்சி வந்திருந்தார்.திருமண விழாவில் கலந்து கொண்டு, திருச்சி மாவட்ட கட்சியினரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடிவிட்டுஅதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமிக்குகொடநாடு கொலை வழக்குகுறித்த பயம். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயப்படத்தேவையில்லை.திமுக தலைமையிலான அரசு, ஜெயலலிதாவின் பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அதை எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்வது தான் தற்போதைய திமுக அரசின் பெருந்தன்மையை வெளிப்படுத்தும்.ஆனால் அந்த பெருந்தன்மையை ஒருபோதும் திமுகவிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.தமிழகத்தில் மீண்டும் அதிமுக வளர்ச்சி அடைய விரைவில் சசிகலா தொண்டர்களைச் சந்திப்பார்.அவர் கட்சியை மீட்டெடுக்க வரும் போது, அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுவோம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)