![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/OU4pfdm6wVysHe-W8-sVuff8qvCtQhjvuc6NTakKaFA/1625031297/sites/default/files/inline-images/603_65.jpg)
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ளார். அவரை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பொன். ராஜா, மத்திய சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் சந்தானகிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்டச் செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர்கள் அமமுகவில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மூவரும், “அமமுக தலைமை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது. அமமுகவுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்துவருகிறது; அமமுக செல்வாக்கை இழந்துவருகிறது.
தலைமை சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளதால் மாவட்டச் செயலாளர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களும் விரைவில் தாய்க் கழகமான அதிமுகவில் தங்களை இணைத்துக்கொள்வார்கள். அதற்கான பணிகளை நாங்கள் செய்வோம்” என்றனர்.