அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், குடிநீர் பிரச்சனை வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் கட்சியில் இருந்து வெளியே சென்ற நிர்வாகியை பற்றிய செய்தியை பூதாகரமாக்குகிறார்கள். அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று சொன்னேன். இப்போது அது தெரிந்துவிட்டது. என்னையும், கட்சியையும் டேமேஜ் பண்ணனும் என்பது தங்க தமிழ்செல்வனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். அதனால் அதனை செய்திருக்கிறார். அங்கு நிர்வாகிகள் பஞ்சம். எங்களிடம் உள்ளவர்களை கூப்பிடுகிறார்கள். அப்படித்தான்பார்க்க வேண்டும். எங்கிருந்தாலும் வாழ்க.
தேனி நிர்வாகிகளை கூட்டி அதிமுகவுக்கு போய்விடலாம், இதனை அண்ணனிடம் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார் தங்க தமிழ்செல்வன். இதனை தேர்தல் முடிந்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது தேனி நிர்வாகிகள் இதனை என்னிடம் தெரிவித்தனர். எனக்கு இதுவரை ஒன்று தெரியவில்லை. அதனை தங்க தமிழ்செல்வன்தான் விளக்க வேண்டும். எதற்காக எங்களுடன் வந்தார் என்று தெரியவில்லை. அவருடைய செயல்பாடுகளை வைத்து சொல்கிறேன். எதற்காக இந்தப் பக்கம் வந்தார் என்று தெரியவில்லை.
ஆறு மாதமாக தங்க தமிழ்செல்வன் நடவடிக்கையை பார்த்து சொல்கிறேன். எதற்காக இந்தப் பக்கம் வந்தார் என்று தெரியவில்லை. இவருக்கு யார் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்தீர்கள் என்று எல்லோரும் கேட்கின்றனர். எல்லாருக்கும் பதவி கொடுத்தபோது, இவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கச் சொன்னது செந்தில் பாலாஜிதான். அது எல்லோருக்கும் தெரியும். அவர் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்துவிட்டார். அவரை யார் இயக்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதிமுக, திமுக இரண்டு பக்கமும் பேசினார். அதிமுக பக்கம் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை.
உங்களிடம் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் திமுக பக்கம் போய்விடுகிறார்கள். திமுகவும் அவர்களை அழைக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
எங்களுடன் இருப்பவர்களை அழைக்கிறார்கள். இதை பார்த்தால், அங்கு ஏற்கனவே நிர்வாகிகள் பஞ்சம் உள்ளது. ஆகையால் எங்களிடம் உள்ளவர்களை கூப்பிடுகிறார்கள். அப்படித்தான் பார்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.