தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிட்ட 5 தொகுதிகளில் பூத்வாரியாக கிடைத்த ஓட்டு விபரங்களையும் கேட்டி ருந்தார். பி.ஜே.பி. போட்டியிட்ட 5 தொகுதி களிலும் தோல்வி அடைந்ததோடு, ஓட்டு லீடிங்கும் கன்னா பின்னான்னு எகிறியிருப்பதைப் பார்த்து ரொம்பவே அதிருப்தி அடைஞ்சிருக்கார் அமித்ஷா.'' உ.பி.யில அகிலேஷ்- மாயாவதி கூட்டணி ஒர்க்-அவுட் ஆகல. கர்நாடகத்துல காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி ஒர்க்-அவுட் ஆகல. அதே மாதிரிதான் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஒர்க்-அவுட் ஆகல.

Advertisment

bjp

Advertisment

காரணம் அ.தி.மு.க.வுக்குள்ளேயே பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் அதிகம்னு சொல்லியிருக்கு. அதற்கு பா.ஜ.க. தலைமையோ, 2014-ல் மேற்குவங்கத்தில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றோம். ஆனா இப்ப 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கோம். ஆனால் தமிழ்நாட்டிலோ நாளுக்கு நாள் கட்சி தேஞ்சுக்கிட்டே போகுது. இப்படியே போனால் தமிழ்நாட்டில் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என ரொம்பவே கவலைப்படுகிறதாம்.இதனால் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த புதிய திட்டத்தை உருவாக்க அமித்ஷா நினைக்கிறாராம்.