மத்திய உள்துறை அமைச்சாரான அமித்ஷா, நீண்ட நாட்களுக்குப் பிறகு மாநில முதல்வர்களோடு மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்துக்கு மேலாக, அமித்ஷா வெளியில் தலைகாட்டாதது குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. குறிப்பாக அவருக்கும் பிரதமர் மோடிக்கும் ஏற்பட்ட உரசல்தான் அதுக்குக் காரணம் என்றும் கூறிவந்தனர். மேலும் அமித்ஷா, அவசரப்பட்டுக் கொண்டுவந்த குடிமக்கள் சட்டத் திருத்த மசோதாவால்தான், தன் இமேஜ் ஏகத்துக்கும் சரிந்ததாக நினைத்து அமித்ஷாவிடம் மோடி கோபப்பட்டார் என்று கூறினர்.
இதனால் அப்செட்டான அமித்ஷா, அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வந்தபோது கூட பெரிதாக ரியாக்ஷன் கொடுக்கவில்லை என்கின்றனர். இந்த நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்திகள் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அமித்ஷா, தான் நலமுடன் இருப்பதைக் காட்டிக் கொள்ளவே மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் தன் உடல்நிலை பற்றிய வதந்தியைச் சொந்தக் கட்சியினர்தான் கிளப்பியிருக்க வேண்டும் என்று அமித்ஷா சந்தேகப்படுவதாகச் சொல்லப்படுகிறது.