தஞ்சாவூர் மாவட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (11/07/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தீயசக்தி தி.மு.க.வை வீழ்த்துவதற்கு கூட்டணி அமைக்க நேசக்கரம் நீட்டத் தயார். கூட்டணிக்கு தலைமை யார் என்பதை அந்த நேரத்தில் முடிவு செய்வோம். தி.மு.க. வரம்பு மீறி ஆட்சி செய்யும் போது மூக்கணாங்கயிறு போல் ஆளுநர் செயல்படுவது தேவை தான். ஜெயலலிதா மரணத்தில் தி.மு.க. அரசியல் செய்தால் மாட்டிக் கொள்ளும்" எனத் தெரிவித்தார்.