Skip to main content

“கூட்டணி முறிவு என்பது அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு” - எடப்பாடி பழனிசாமி

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

alliance Breaking the is a decision taken by ADMK members says EPs

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதே சமயம் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிவு குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வந்தனர்.

 

இந்நிலையில் சேலத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் குறித்து பேசுகையில், “அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு. தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி முறிவு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் கூறவில்லை என  கூறுகிறார்கள். ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகிறது என்றால் அது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். அதுதான் இறுதி முடிவு.

 

alliance Breaking the is a decision taken by ADMK members says EPs

 

தமிழக மக்கள் தான் எஜமானர்கள். எனவே தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவது தான் அதிமுக லட்சியம். தேசிய கூட்டணியில் இருக்கும் போது தேசியக் கட்சி எடுக்கும் முடிவுகளில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் நாம் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதை நிறைவேற்றுகின்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். இனி அது போன்ற நிலைமை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்”என தெரிவித்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Chennai High Court verdict on Sasikala's removal from ADMK will go away

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சசிகலா தரப்பில் கூறியதாவது, “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. இது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ அல்லது கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து, நீதிபதிக்கும், சசிகலா தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது.  

 

இதனை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை தொடர்கிறார்கள். அதனால்,  இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும்” என்று கூறினார். 

 

அதே போல், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், “பொதுக்குழு கூட்டங்கள் கட்சி விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டது. அந்த கூட்டங்கள் செல்லும் என்பதை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அடிப்படையிலேயே சசிகலா கட்சியில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்” என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். 

 

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (05-12-23) பிறப்பித்தனர். அதில், வி.கே.சசிகலா தொடர்ந்திருந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், சிவில் கோர்ட் உத்தரவை உறுதி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். மேலும், அந்த தீர்ப்பில், “அ.தி.மு.க.வில் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரரான சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்