Skip to main content

''என்ன கேட்டாலும் இதுதான் பதில்'' - தீர்ப்பு குறித்து ஓபிஎஸ்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

"All for the good..." - OPS on the verdict

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.

 

இந்தநிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தது. அந்த உத்தரவில் 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். அதற்காக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். வேட்புமனுவில் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் தேர்தல் ஆணையம் அதை தற்காலிகமாக அங்கீகரித்து விடப்போகிறது. ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது இந்த பொதுக்குழுவில் செல்லாது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “எங்களைப் பொறுத்த வரையில் எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்ப, “இரண்டு வரியில் பதில் சொல்ல சொன்னீங்க.. எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிட்டோம். எல்லாம் நன்மைக்கே” என்றார். செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியும் அவர் ‘எல்லாம் நன்மைக்கே’ என்பதைத் தவிர வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார்.

 

 

சார்ந்த செய்திகள்