Skip to main content

வேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு திமுக தனது பணிகளை தொடங்கிவிட்டது. இதேபோல் அதிமுக கூட்டணி வேட்பாளர் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அ.தி.மு.க சார்பில் வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். மேலும் இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.
 

dmk



இந்த நிலையில் அ.தி.மு.க, பாஜக கூட்டணி காட்சிகள் இடையே நல்ல புரிதல் இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். வேலூரில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், பாஜகவினரை பிரசாரத்துக்குப் பயன்படுத்த அதிமுகவினர் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த முறையே ஏராளமான பணத்தை செலவு செய்து வீணாகிவிட்டது’ என வருத்தத்தில் அதிமுக வேட்பாளர் உள்ளார் என்று கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில் வேலூரில் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்