நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது ஒரு சீட்டு என்றாலும் மத்திய மந்திரி சபையில் இடம் பிடிக்க அ.தி.மு.க.வில் தீராத ஆசை இருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு வருசமா சரியான தலைமை இல்லாமலேயே மாநிலத்தில் ஆட்சியைக் காப்பாற்றி, பதவி சுகத்தின் பலாபலன்களை அனுபவிக்கிறாங்னு ஒரு தகவல் பரவி கொண்டிருக்கிறது. தேனியில் முழு அதிகார பலத்தைப் பயன்படுத்தி, தன் மகன் ரவீந்திரநாத்தை எம்.பி.யாக்கிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., எப்படியும் மத்திய இணை யமைச்சர் பதவியை வாங்கித் தந்திடணும்னு பெரும் முயற்சியில் இருக்காரு.
அ.தி.மு.க அணி படு தோல்வியை சந்திச்சிருக்கிற நிலையில், தன் மகனை அமைச்சராக்குவதில் ஓ.பி.எஸ். காட்டுற ஆர்வம் சீனியர்களை அதிகமாக கோபமடைய வைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. வில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து தர்மயுத்தத்தை செஞ்சிட்டு, இப்ப தன்னோட வாரிசை வளர்க்குறாருன்னா, இதுக்காகத்தான் சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். காலி பண்ணினாரான்னு கேட்குறாங்க. எடப்பாடியுடனான உரசல்களை சகிச்சிக்கிட்டதுகூட, தன் மகன் ரவீந்திரநாத்துக்கு எம்.பி. சீட் வாங்கி மத்திய மந்திரியாக்குவதற்குத்தான்னும், ரிசல்ட்டுக்கு முன்னாடி வாரணாசிக்குப் போன தற்கும் வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கத்தான்னும் பேசுறாங்க.
ஓ.பி.எஸ். முயற்சிக்கு பிரேக் போட, ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கமும், டெல்லியில் டேரா போட்டிருக்கார். தனக்குப் பதவி வேணும்னும், ஓ.பி.எஸ். மகனுக்குக் கொடுத்தால், வாரிசு அரசியலால், மறுபடியும் அ.தி.மு.க. ஒரு பலமான பிளவைச் சந்திக்க நேரும்ன்னும் சொந்தக் கட்சிக்கே எச்சரிக்கை விடுத்துக்கிட்டு இருக்காராம். இதை டெல்டா மாவட்டத்தில் இருக்கும் சசிகலா, டி.டி.வி. தினகரன் சொந்தங்களும் தூண்டி விடுறாங்கணு அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.