admk rajya sabha seat issue

நாடாளுமன்றத்தில் தி.மு.கவின் ராஜ்யசபா எம்.பிக்களான ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது. அதேபோல் அதிமுகவில் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் விஜயகுமார் பதவிகாலமும் நிறைவடைகிறது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 6 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 10-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ந் தேதி தொடங்க உள்ளது. திமுக, அதிமுகவில் யார் யாருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்பது விவாதப் பொருளாக இருந்துவந்தது.

Advertisment

இந்நிலையில், திமுக கிரிராஜன், ராஜேஸ்குமார் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்துள்ளது. அதிமுக தரப்பில் இன்னும் வேட்பாளர் அறிவிப்பு வெளிவராததால் பலரும் சீட் வாங்க போட்டியிட்டுவருகின்றனர்.

Advertisment

admk rajya sabha seat issue

இந்நிலையில் இன்று, அதிமுக தலைமை அலுவலகத்தில் திடீரென முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் சி.வி.சண்முகத்திற்கு சீட் கேட்டு மனு கொடுத்துள்ளனர். அதிமுகவின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் இத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

admk rajya sabha seat issue

இது குறித்து அதிமுக தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, “எடப்பாடி, ஒரு ராஜ்யசபா சீட்டை செம்மலைக்கு தருவதாக இருந்தார். சட்டமன்றத் தேர்தலின்போது மேட்டூர் தொகுதியை எடப்பாடி, பாமகவுக்கு ஒதுக்கினார். அந்த சமயம், செம்மலையிடம், “மேட்டூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதால் ராஜ்யசபா சீட்டை உங்களுக்கு ஒதுக்குகிறேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதன் காரணமாகவே அவருக்கு சீட் தருவதற்கு எடப்பாடி திட்டம் போட்டுவைத்திருந்தார்.

admk rajya sabha seat issue

ஆனால், ஒ.பி.எஸ் இதற்கு தடை போடுகிறார். ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்த செம்மலை திடீரென எடப்பாடியின் ஆதரவாளராக மாறியதால், ஓ.பி.எஸ். இவருக்கு சீட் கொடுக்க முட்டுக்கட்டை போடுகிறார். அதேசமயம், ஓ.பி.எஸ்பலத்தை செம்மலை குறைக்கிறார் என்பதாலே அவருக்கு சீட் கொடுக்காமல் எடப்பாடியும் காலம் தாழ்த்திவருகிறார்.

admk rajya sabha seat issue

அதேசமயம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடிக்கு தொடர்ந்து வலிமையான ஆதரவு தந்து வந்தது சி.வி.சண்முகம். அதனால் அவருக்குதர முடிவு செய்தார். ஆனால், சி.வி.சண்முகம் எதுவும் ராஜ்யசபா சீட் குறித்து தலைமையிடம் கேட்கவில்லையே எனும் குரல் கட்சிக்குள் ஒலித்தது. அதன் காரணமாக இன்று சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் திடீரென அதிமுக தலைமை அலுவலகத்தில் அவருக்கு சீட் வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வழிகாட்டு கூட்டம் நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.