Published on 05/12/2020 | Edited on 05/12/2020

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில், இளம் பெண் இளைஞர் பாசறை ஆள் சேர்ப்பு மற்றும் நிர்வாகிகள் தேர்வு முகாம் நகர செயலாளர் பீர் முகமது தலைமையில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நிலக்கோட்டை அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர் பங்கேற்றார். அப்போது, காந்தி நகரில் நடந்த முகாமில் அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் நாகூர்கனி ஏற்பாட்டில் பூத் ஏஜெண்டுகள் மற்றும் பாசறை பெண்களுக்கு பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதனை ஒவ்வொருவருக்கும் வழங்கிய தேன் மொழி, வரக்கூடிய சட்டமன்ற தேர்தலின்போது உங்க ஏரியா பெண்கள் ஓட்டு முழுவதும் நமக்கு விழுகிற மாதிரி பார்த்து நன்றாக வேலை செய்யுங்கமா நீங்க எதிர் பார்க்கிறது எல்லாம் டபுள் மடங்கா கிடைக்கும் என்று உற்சாகப்படுத்தினார்.