நேற்று விழுப்புரத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பத்திரிகையாளர்களைச் சந்திதார், அப்போது அமைச்சர் சண்முகம் பேசும்போது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மீது 98 பக்க ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். இது புதிதாகச் சொல்லப்பட்ட புகார் அல்ல. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே இது போன்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வருகின்றன.
பாஜக அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, கொள்ளையடித்த பணத்தை பொங்கல் பண்டிகைக்கு அ.தி.மு.க. கொடுக்கிறது என்றால், விவசாயிகளுக்கு ரூபாய் 6,000 மத்திய அரசு வழங்குகிறதே அது எதிலிருந்து கொடுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் சண்முகம், குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை.
மேலும் அது சம்பந்தமான பணிகள் எதுவும் இன்னும் துவங்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், அதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையாகஉள்ளது. பாரத் நெட்டில் 1,950 கோடி ஊழல் என்கிறார்கள். நடக்காத டெண்டரில் எப்படி ஊழல் செய்ய முடியும்? அது குளோபல் டெண்டர் அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். பொதுமக்கள் ஏமாற மாட்டார்கள்” இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.
மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, அவரது மகன் உதயநிதி அரசின் அனுமதிபெறாமல் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்து வரிஏய்ப்பு செய்தார். இதனால் அப்போதைய மன்மோகன் சிங் அரசு அந்த காரை பறிமுதல் செய்ததா? இல்லையா? ஸ்டாலின் மருமகன் சபரீசன் காலாவதியான மருந்துகளை கோடிக்கணக்கில் விற்றவர். தி.மு.க. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் 368 வழக்குகள் உள்ளன.
ஊழல் எனும் பெயரை இந்தியாவில் அறிமுகம் செய்ததே கலைஞர்தான். தி.மு.க. கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், நேரடியாக வழக்கு தொடுங்கள். அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தி.மு.க.விற்கு மக்கள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையில்லை. தேர்தலை மனதில் கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளைப் புதிதாகக் கொடுத்துள்ளனர் ஸ்டாலினுடைய வாழ்க்கையே பினாமி வாழ்க்கைதான் விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு அருகதை கிடையாது பாஜக ஆட்சிக்கு யாரும் இங்கு அடிபணியவில்லை. இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.