அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (10/04/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும்தேர்தல் பணியாற்றிய 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர். அதன்படி, பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்படுகிறார். அதேபோல் பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பெருமாள், மார்ட்டின் லூயிஸ், சௌந்தர், ராம்குமார் உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
'சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்' - ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு!
Advertisment