Skip to main content

அதிமுக, காங். வேட்பாளர் மற்றும் அதிமுக முன்னாள் எம்பிக்கு கரோனா தொற்று 

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

ddd

 

திமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டதால் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

 

இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெயக்குமாருக்கு நேற்று முன்தினம் மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கரோனா பரிசோதனைக்காகச் சென்றார். அங்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வேட்பாளர் ஜெயக்குமார் அனுமதிக்கப்பட்டார். 

 

நெல்லை முன்னாள் மேயரும், அதிமுக முன்னாள் எம்பியுமான விஜிலா சத்யானந்த் கரோனா தொற்று காரணமாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான செல்வப்பெருந்தகை கரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இதுதொடர்பாகச் செல்வப்பெருந்தகை தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, ‘‘எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும், என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள், கட்சியினர், உறவினர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்