தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை, தேனாம்பேட்டை பகுதி, 117வது வார்டு அதிமுக வேட்பாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னய்யா வாக்கு சேகரித்தார்.