Published on 10/10/2019 | Edited on 10/10/2019
அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி அமைந்து, தைலாபுரத்தில் முதல்வர் தொடங்கி அமைச்சர் வரை பலருக்கும் விருந்து வைபவம் நடந்தது. அரசியல் ரீதியாக இது பலம் என்றாலும், மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் பைக் ரேஸ் விபத்தில் சிக்கி, கால்கள் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் தங்கை மகன் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் வளர்ப்பு மகன் போல அத்தனை செல்லமாக செல்வாக்காக இருந்த லோகேஷ் தற்கொலை, கட்சி கடந்த அனுதாபத்தை உருவாக்கியதால அ.தி.மு.க., தி.மு.க., வி.சி.க., பா.ம.க.என்று பலரும் போய் ஆறுதல் கூறியிருக்கிறார்கள். அமைச்சர் குடும்பத்தில் வரிசையாக ஏற்படுற தாக்குதல்களால் சென்ட்டிமென்ட்டாக மிகவும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் லோகேஷின் அம்மா, அதாவது அமைச்சரின் தங்கை ஏற்கனவே இறந்துவிட்டார்கள். இதனால் தாயில்லாத பிள்ளை என்ற குறை தெரியாமல் மருமகனை, மறு மகன் போல வளர்த்தவர் சண்முகம் தான். அதனால், இந்த தற்கொலையை அவரால ஜீரணிக்க முடியவில்லை. ஆறுதல் சொல்ல வந்தவங்ககிட்ட மனசு விட்டு அழுதிருக்காரு அமைச்சர். அதே நேரத்தில், இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரும் சென்னையில் இருந்தும், இரண்டரை மணி நேரப் பயண தூரமான விழுப்புரத்துக்கு வரலை என்கிற செய்தியும் அமைச்சருக்கு ரொம்பவே வருத்தமளித்துள்ளது. தன் பொறுப்பில் உள்ள இடைத்தேர்தல் களத்தில்கூட அவரும் ஆதரவாளர்களும் கொஞ்சம் டல்லாத்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இன்று ஓபிஎஸ் அமைச்சர் சண்முகம் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார்.