Published on 06/07/2019 | Edited on 06/07/2019
சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக் கூறியதாக அவர் மீது ஆயிரம் விளக்கு போலீஸார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கால் வைகோவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 10ஆயிரம் அபராதமும் விதித்தது.
எண்ணையை தடவிக்கிட்டு மனல்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் - பழமொழி.
— Kasturi Shankar (@KasthuriShankar) July 5, 2019
எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். - புதுமொழி.
டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் !
எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே !
இதனால் அவர் மாநிலங்களைவை எம்.பி ஆக முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் எண்ணையை தடவிக்கிட்டு மனல்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் - பழமொழி. எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். - புதுமொழி. டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் ! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே! என்று வைகோவை கலாய்த்து ட்விட் போட்டுள்ளார்.