Skip to main content

''2026-ல் பாமக ஆட்சிதான்; எல்லாரையும் போய் பாருங்க'' - செயல்வீரர்கள் கூட்டத்தில் அன்புமணி அறிவுரை   

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

"In 2026, it will be BAMAK government; everyone go and see" - Anbumani's speech in the activists' meeting

 

களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசுகையில், ''கரடு முரடான பாதைகள்; எத்தனையோ போராட்டங்கள்;எத்தனையோ தியாகங்கள் செய்துள்ளோம். லட்சக்கணக்கான மக்கள்  சிறைக்கு சென்று இருக்கின்றோம். நூற்றுக்கணக்கானவர்கள் தன் உயிரை நம் கட்சிக்காக; இயக்கத்திற்காக; தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கொடுத்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள்.

 

இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை செய்த கட்சி பாமக. ஆனால் இவ்வளவு காலமாக மக்கள் நம் மீது இன்னும் முழுமையாக நம்பிக்கை வைக்கவில்லை கடந்த காலத்தில். இப்பொழுது நம்பிக்கை வைக்கத் தொடங்கி விட்டார்கள். என்னுடைய நோக்கம் 2026ல் சட்டமன்ற தேர்தலில் பாமக உறுதியாக ஆட்சி அமைக்கும். அதற்கு ஒரு முன்னோட்டம் தான் 2024 ஆம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தல்.  2024 நாடாளுமன்ற தேர்தல் செமி ஃபைனல் 2026 பேரவை தேர்தல் ஃபைனல். அதற்கு வேகமாக இங்க இருக்க கூடிய செயல் வீரர்கள் ஈடுபட வேண்டும். களப்பணியாளர்கள் என்று உங்களை சொல்ல மாட்டேன் ஏனென்றால் நீங்கள் எல்லாம் வீரர்கள். களத்தில் இறங்குங்கள். இந்த கட்சி; இந்த ஜாதி எல்லாத்தையும் என விட்டு விட்டு எல்லாரையும் போய் பாருங்கள். எல்லாரையும் அணுகுங்கள். பார்த்தீர்கள் என்றால் தான் அவர்களுக்கு ஒரு மன மாற்றம் வரும். நிச்சயமாக நமக்கு ஆதரவு கொடுப்பார்கள். நீங்கள்தான் அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என பலர் போகும் இடமெல்லாம் சொல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் அந்த மனநிலையில் இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப இங்கிருக்கும் செயல்வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'இலச்சினையில் தன்வந்திரி'-அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Dhanvantri in alphabet; Immediate withdrawal - Anbumani Ramadoss insists

 

இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான  தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி படம் இடம் பெற்றுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான  தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி எனப்படும் கடவுளின் உருவப்படம் திணிக்கப்பட்டிருப்பதும்,  இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயர் பொறிக்கப்பட்ட இருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது முற்றிலும் தேவையற்ற செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.

 

மருத்துவம் என்பது உயிர் காக்கும் தொழில் ஆகும். உயிரியலும், தொழில்நுட்பமும் தான் மருத்துவத்திற்கான அடிப்படை ஆகும். மருத்துவத்திற்கு மனிதநேயம் கூடுதல் தகுதி ஆகும். ஆனால், இவற்றில் எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாத தன்வந்திரி கடவுளின் படத்தை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் சேர்ப்பது எந்த வகையில் நியாயம்? தன்வந்திரி என்பவர் பாற்கடலை தேவர்கள் கடையும் போது உருவெடுத்தவர்; அவரால் தான் ஆயுர்வேத மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது; அவர் தான் தேவர்களுக்கு மருத்துவம் அளித்தார் என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவை அழகான கற்பனை என்பதைக் கடந்து வேறொன்றுமில்லை.

 

கற்பனைக் கடவுளை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் திணிப்பது மிகவும் பிற்போக்கானது. மருத்துவக் கட்டமைப்பு, மனித வளம் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்பட்டால், அதற்கான நடவடிக்கை  எடுக்கும் பொறுப்பில் உள்ள மருத்துவ ஆணையம் இப்படி ஒரு செயலை செய்திருக்கக் கூடாது. மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்காமல் தன்வந்திரியின் உருவப்படத்தை வைத்து அவரே மானசீகமாக மாணவர்களுக்கு  மருத்துவப் பாடம் நடத்துவார் என்று கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூறப்பட்டால், அதை மருத்துவ ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா?

 

மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரியின் படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டு விட்டதாகவும்,  கறுப்பு - வெள்ளையில் இருந்த படத்திற்கு இப்போது வண்ணம் மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதாகவும்  மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. தன்வந்திரி படம் எப்போது சேர்க்கப்பட்டிருந்தாலும் அது தவறு தான். அதற்கு இப்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை மதித்து இலட்சினையில் இருந்து தன்வந்திரி படம் நீக்கப்படுவது தான் முறையாகும்.

 

மருத்துவக் கல்லூரிகளில்  முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளலாம் என்று  கடந்த ஆண்டு மருத்துவ ஆணையம் பரிந்துரைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது தன்வந்திரி படத்தை திணித்து அடுத்த சர்ச்சையை  ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவத்துறை வளர்ந்து விட்ட நிலையில், அதை மேலும் வலுப்படுத்த மருத்துவக் கல்வி  ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, புராணங்களின் அடிப்படையில் சர்ச்சைகளை திணிக்க முயலக்கூடாது. தேவையின்றி ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி படத்தை நீக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

3 மாநிலங்களில் பாஜக- தெலுங்கானாவில் 'கை' பதித்த காங்கிரஸ்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

BJP in 3 states - Congress in Telangana

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11.30 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 66 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 41 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 162 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 65 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 107 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 75 இடங்களிலும், மற்றவை 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 53 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 35 இடங்களிலும் மற்றவை  2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் முதன்முதலாக தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்