eps

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என ரஜினிகாந்த் சொன்னதில் இருந்து, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

Advertisment

ரஜினியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன. பூத் கமிட்டிகளை அமைப்பது, ரஜினி மக்கள் மன்றத்திற்குப் புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பது போன்ற பணிகளை மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், மாற்றுக் கட்சியில் இருந்தும் ரஜினி தொடங்கவுள்ள கட்சிக்கு வரவும் பலர் தயாராக உள்ளனர். அனைத்துக் கட்சியிலும் அவரது ரசிகர்கள் உள்ளனர். மாற்றுக் கட்சியில் உள்ள பலரை, பல வருடங்களாகவே அவர் அழைத்து, பல நேரங்களில் கட்சித் தொடங்குவது குறித்து ஆலோசித்துள்ளார்.

Advertisment

இதனிடையே அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் 10-க்கும் மேற்பட்டோர், ரஜினியின் புதுக்கட்சியில் சேரும் மூடில் இருக்கிறார்கள் என்று உளவுத்துறை எடப்பாடி பழனிசாமியிடம்ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம். இதனால், எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சி அடைந்தாராம்.

ஏற்கனவே பிரச்சாரத்தில் கமல், 'எம்.ஜி.ஆரின் நீட்சி நான்' என்று பேசி வருகிறார். ரஜினி ஜனவரி 17ல் கட்சித் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களில் 10-க்கும் மேற்பட்டோர், ரஜினி கட்சியில் சேரும் மூடில் இருப்பதாக வந்த தகவல் கேட்டு அப்செட்டில் உள்ளாராம்.