zomato introduces period leaves for its employees

Advertisment

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோ, தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான மாதவிடாய் கால விடுப்பை அறிமுகம் செய்துள்ளது.

சனிக்கிழமை சொமாட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த சொமாட்டோ நிறுவன தீபீந்தர் கோயல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சொமாட்டோ நிறுவனத்தில் நம்பிக்கை, உண்மை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் என்ற கலாச்சாரத்தை வளர்க்க விரும்புகிறோம். மாதவிடாய் கால விடுப்புக்கு விண்ணப்பிப்பதில் எந்தவொரு அவமானமோ, களங்கமோ கிடையாது. உங்களது குழுக்களில் உள்ளவர்களிடமோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இந்த விடுப்பு குறித்த தகவலைச் சொல்லத் தயங்க வேண்டாம்.

Advertisment

இதுகுறித்த தேவையற்ற துன்புறுத்தல் அல்லது வெறுக்கத்தக்கக் கருத்துகளை யாரேனும் சந்தித்தால் தைரியமாகப் புகார் கூறலாம்" எனத் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவன பெண் ஊழியர்களுக்காக சொமாட்டோ நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த புதிய திட்டம் அந்நிறுவன ஊழியர்களைக் கடந்து பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.