எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் கமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஷிப்டிலும் 8 முதல் 10 வீரர்களைக் கொண்ட கமாண்டோக்கள் 85 வயதாகும் யஷ்வந்த் சின்ஹாவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். வரும் ஜூன் 27- ஆம் தேதி அன்று யஷ்வந்த் சின்ஹா தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஏற்கனவே மத்திய அரசு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.