Skip to main content

சொந்த கட்சி எம்.பியை கைது செய்த ஜெகன்மோகன் ரெட்டி அரசு!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

jegan mohan

 

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்துவருகிறார். அதே கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு. இவர் கடந்த ஒருவருடமாக ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்துவருகிறார்.

 

இவர் சமீபத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பெயிலை இரத்து செய்ய வேண்டுமென்றும், ஜெகன்மோகன் ரெட்டி பெயில் விதிமுறைகளை மீறுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று (15.05.2021) ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார், மக்களவை எம்.பி கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜுவை அதிரடியாக கைது செய்தனர்.

 

மேலும், குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார் அவர் மீது, ஜெகன்மோகன் தலைமையிலான அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டியதகாவும் கூறி தேசத்துரோக வழக்கை பதிவுசெய்துள்ளனர். சமூக ஒற்றுமை அல்லது தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்