
இணைய சேவையைப் பயன்படுத்துபவர்கள், நிச்சயமாக பயன்படுத்தும் தளம் யூடியூப். தற்போது இந்தியாவில் 4ஜி பயன்பாடு அதிகமாகிவிட்ட நிலையில்,யூடியூப் சேனல்களும் அதிகமாகிவிட்டன. அந்த சேனல் மூலம் வருமானமும்கிடைப்பதால், பலர் யூடியூப் சேனல் நடத்துவதையேமுழுநேர தொழிலாக நடத்த தொடங்கிவிட்டனர்.
இந்தநிலையில் யூடியூப் நிறுவனம், எடுக்கவுள்ள நடவடிக்கையால் அமெரிக்காவிற்கு வெளியேவுள்ள யூடியூபர்களின் வருமானம் குறையவுள்ளது. ஏனென்றால் யூடியூப் நிறுவனம் இனி, அமெரிக்காவிற்கு வெளியிலுள்ள யூடியூப் சேனல்களின் வருமானத்திலிருந்து வரி பிடித்தம் செய்யவுள்ளது. இதுதொடர்பாகயூடியூப், சேனல் நடத்துபவர்களுக்கு அனுப்பியுள்ள ஈ-மெயிலில், “சரியான வரியைப் பிடித்தம் செய்வதற்காகக்ரியேட்டர்கள், தங்களது 'அட்சென்ஸ்' (adsense) கணக்கின் வரி தொடர்பான தகவல்களைசமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளது.
மேலும், மே 31ஆம் தேதிக்குள் வரி தொடர்பான தகவல்களைசமர்ப்பிக்கவில்லையெனில், மொத்த வருமானத்திலிருந்து 24 சதவீதம் வரியாக பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யூடியூப் சேனல் நடத்துபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)