Published on 15/07/2022 | Edited on 15/07/2022

இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலம், மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட வங்கியின் மேலாளர் காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தின் திரையை சுத்தியால் உடைத்துவிட்டு, செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இயந்திரத்தில் இருந்து பணம் வராத விரக்தியில் இவ்வாறு செய்தாரா என்கிற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.