பரபரப்பான சாலையில் புகுந்த சொகுசு காரிலிருந்துகட்டுக்கட்டாகரூபாய் நோட்டுகளை எடுத்து அள்ளி வீசும் மர்ம நபரின் வீடியோ காட்சிகள்அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதிக்கு அருகே உள்ளது கோல்ஃப் கோர்ஸ் சாலை. இது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால், எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி இரவு 9 மணியளவில், திடீரென அந்த பகுதிக்குள் புகுந்த விலை உயர்ந்த வெள்ளை நிற கார் ஒன்றுகோல்ஃப் கோர்ஸ் சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த சொகுசு காரின் டிக்கியில் இருந்து முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், திடீரென காருக்குள் இருந்த கட்டுக்கட்டான ரூபாய் நோட்டுகளை எடுத்துநடுரோட்டில் வீசினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள்அந்த காருக்குள் என்ன நடக்கிறது எனத்தெரியாமல்சில நொடிகள் திகைத்துப் போனார்கள். இதனால், சிறிது நேரத்திற்கு அந்த இடம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள்சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவத்தொடங்கியது. பின்னர்இதையறிந்த குருகிராம் போலீசார், ‘நடுரோட்டில் ரூபாய் நோட்டுகளை வீசியது யார்? அதற்கான காரணம் என்ன?’எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதன்பிறகுசாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துசோதனை செய்ததில்அவை அனைத்தும் போலியானவை எனத்தெரிய வந்துள்ளது. அதே சமயம், சாலையில் ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டுபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் பிரபல யூடியூபரான ஜோரவர் சிங் கல்சி தான் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த யூடியூபரை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "சமீபத்தில் வெளியான ‘Farzi' என்கிற வெப் சீரிஸில், நடுரோட்டில் ரூபாய் நோட்டுகளை வீசிச் செல்வது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த அக்காட்சியை ரீல்ஸ் செய்வதற்காகவேஇவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக”தெரிவித்துள்ளனர்.