உத்தரப்பிரதேசம் மாநிலம் முராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 16 வயது பட்டியலின சிறுமி. இவரது பெற்றோர், இருவரும் கூலி வேலைக்குச் செல்கின்றனர். அந்தவகையில், நேற்று காலை வழக்கம் போல் சிறுமியின் பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது காலையில் வீட்டின் அருகே சிறுமி தனியாக நின்று கொண்டிருந்த போது, அவ்வழியாக காரில் வந்த ரஷித் என்ற இளைஞர், சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
இதனால் சிறுமி செய்வதறியாமல் கத்தி கூச்சலிட, ரஷித் காரிலே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனைத் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவுசெய்துள்ளார். பின்பு ஓடும் காரில் இருந்து சிறுமியைக் கீழே தள்ளிவிட்டு, நிற்காமல் தப்பி ஓடியுள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டுள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்பு சிறுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு தப்பியோடிய ரஷித்தை கைது செய்தனர். பின்பு அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.