புலியின் பிடியில் சிக்கிய இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பாந்தரா மாவட்டத்தில் புலியின் நடமாட்டம் உள்ளதாக புகார் எழுந்த நிலையில் பொதுமக்களில் சிலரை கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி கொன்றது. இந்நிலையில் வனத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அந்த மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் புலியின் பிடியில் சிக்கி தப்பிய சம்பவம் பதிவாகியுள்ளது.

Advertisment
Advertisment

அதன்படி வயலில் வேலை செய்து கொண்டிருந்த அவரின் அருகில் புலி ஒன்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இறந்த பிணம் போல வயலில் படுத்துக்கொண்டார். அவர் அருகில் வந்த புலி சில வினாடிகள் நின்றது. அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பவே பயந்து போன புலி அங்கிருந்து ஓடியது.