Young people gathered to register at the employment office!

புதுச்சேரியில் முதுநிலை எழுத்தர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் குவிந்ததால், அதிகாரிகள் திணறினர்.

Advertisment

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல ஆண்டுகளுக்கு பின் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால், புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஏராளமான இளைஞர்கள் திரண்டனர்.

Advertisment

வேலைவாய்ப்பு பதிவினைப் புதுப்பிப்பது, புதிய பதிவு செய்வது ஆகிய பணிகளுக்காக, ஒரே நேரத்தில் 1,000- க்கும் அதிகமானோர் திரண்டதால் அலுவலக அதிகாரிகள் திணறினர்.